google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html சொல்லிட்டாருப்பா! ~ bulls$treet

Ads Inside Post


சொல்லிட்டாருப்பா!



   நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.ஈரானிய தாக்குதலில் அமெரிக்க சிப்பாய்கள் யாரும் செத்துப் போய்விடவில்லை என்று அவர் சொன்னதன் காரணமாக அமெரிக்க சந்தைகளை டவ்விலும் நாஸ்டாக்கிலும் கொஞ்சம் போல ஏற்றியிருக்கிறார்கள்.இதனையொட்டி இங்கேயூம் கொஞ்சம் ஏற்றுவார்கள் எனத் தெரிகிறது.



  பொதுவாக செக்டார்களில் இந்த அமெரிக்க-ஈரானிய சனித் தொந்தரவூ காரணமாக உலோகப் பங்குகளிலும் எண்ணைய்ப் பங்குகளிலும் ஸ்பெகுலேட்டிவ்வான நகர்வூ இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என்று கணித்திருக்கிறௌம்.
 விஇடிஎல் டாடாஸ்டீல் போன்ற பங்குகள் எல்லாம் வலை விரித்து வைத்துக் கொண்டு காத்திருக்கின்றன.டிரேடிங் நுட்பம் தெரியாத யாரும் இந்த பங்கில் காலை வைத்தால் உள்ளே இழுத்து செமத்தியாக வைத்து செய்து விட்டு வெளியே தள்ளி விடும்.



 க்யூஐபி வழியாக பெரிய அளவில் பணம் புரட்ட பார்திஏர்டெல் ரெடியாகி விட்டதால் இந்த பங்கில் இனி மொறுமொறுப்பான மொமன்ட்டம் காணப்படும்.டிரேடிங்கிற்கு அடிமையாகி விட்ட டிரேடர்களும் ஒரே பாட்டில் கோடீஸ்வரர்களாகி விட விரும்பும் முதலீட்டாளர்களும் இந்த பங்கைத் துரத்திப் பார்க்கலாம்.
 ஒரு சில ஃபார்மா பங்குகள் அமெரிக்க ட்ரக் ஏஜென்சியின் கருணையால் இங்கே ஏற்றம் பெற காத்திருக்கின்றன.
 வாகனப் பங்குகள் மட்டும் இன்னமும் டேக் ஆஃப் ஆகாமல் முனகிக் கொண்டிருக்கின்றன.இந்த நிலை அடுத்த வாரம் மாறும் என நினைக்கிறேன்.
 வியாழன் வெள்ளி ஆகிய இந்த இரண்டு நாட்களுக்கு அவ்வளவூதான்.புத்திசாலிகள் கிடைக்கிற பங்குகளை வைத்துக் கொண்டு பிழைத்துக் கொள்ளுங்கள்.


Previous
Next Post »

ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv