Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
Click here to Open "FREE" mobile trading a/c
பாரத்பயோடெக் நிறுவனம் தன்னுடைய தயாரிப்பான கோவாக்ஸின் என்ற பெயரில் கொண்டு வரும் கோவிட்-19க்கான தடுப்பு மருந்தை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை பெற்றிருக்கிறது.இது ஃபார்மா கம்பெனிகளுக்கும் ஃபார்மா பங்குகளுக்கும் ஒரு புதிய உத்வேகத்தை தரும் என்றே எதிர்பார்க்கலாம்.
வரும் வாரத்தில் ஃபார்மா பங்குகள் மற்றும் மருத்துவமனை தொடர்பான பங்குகளில் அதிக அளவிலான டிரேடிங் வாய்ப்பு கொட்டிக் கிடக்கவூம் வாய்ப்பிருக்கிறது.உடனே சகட்டுமேனிக்கு எல்லா ஃபார்மா பங்குகளிடமும் ஜூட் விட்டு விட வேண்டாம்.ஒரு சில ஃபார்மா பங்குகள் சற்றே பக்கவாட்டில் திரும்பியபடிதான் இருக்கும்.இன்னொரு புரிதல் என்ன வேண்டுமென்றால் பாரத்பயோடெக் என்பது வேறு.இது ஒரு ப்ரைவேட் லிமிடட் நிறுவனம்தான்.ஆனால் மும்பை பங்குச்சந்தையில் பாரத்பயோ இம்யூனாலஜிக்கல் என்ற பெயரில் ஒரு பங்கு சுமார் 50 ரூபாய்க்கு மேல் நடை பழகிக் கொண்டிருக்கிறது.இதுதான் அது என்று உடனே பாய்ந்து விட வேண்டாம்.
ஃபார்மா பங்குகள் அதிதீவீரம் அடையூம் வேளையில் கோவாக்ஸினுக்கு அனுமதி கொடுத்தது போல இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் ஸீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியா என்ற இன்னொரு தனியார் நிறுவனத்திற்கும் அதன் கோவிஷீல்டு என்ற தடுப்பு மருந்திற்கும் அனுமதி கொடுத்திருக்கிறது.
இந்நேரம் முகேஷ் சேட்டு யோசிக்க ஆரம்பித்திருப்பார்.ரீடெயில் பக்கம் திருப்பிய கவனத்தை சற்றே ஃபார்மா கம்பெனிகள் பக்கமும் திருப்பி ஏதாச்சும் ஃபார்மா கம்பெனியை வளைத்துப் போட்டு "கோவிஜியோ" என்று கலந்தடித்து காசு பார்த்திருக்கலாமே என்று.
இட்ஸ் நாட் டூ லேட் சேட்டு!
Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
ConversionConversion EmoticonEmoticon