இந்த வார மொமன்ட்டம் காணக்கூடிய பங்குகளில் ஒன்றாக அதானிபோர்ட்ஸ் பங்கு இருக்கப்போகிறது என்பதை கணித்திருக்கிறௌம்.இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒரு முக்கியமான காரணமாக இந்த நிறுவனம் ஸ்னோமேன் லாஜிஸ்ட்க்ஸ் நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 40.25 சதவீத பங்குகளை கையகப்படுத்தியிருக்கிறது.இந்த கையகப்படுத்துதலை இது கேட்வே டிஸ்ட்ரிபேக்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கி செய்திருக்கிறது.இந்த செயல் கிட்டதட்ட ஸ்னோமேன் லாஜிஸ்டிங்ஸ் நிறுவனத்தை அதானி போர்ட்ஸ் நிறுவனம் விழுங்கி விட்டதற்கு சமம்.அதனால் அதானிபோர்ட்ஸ் நிறுவனத்தின் பலம் சற்று அதிகரிக்கும்.இதன் பக்க விளைவாக அதானிபோர்ட்ஸ் நிறுவனத்தை ஸ்பெகுலேட்டிங் மகாசனங்கள்; விறுவிறுவென்று ஓடிப்போய் லாங்கோ ஷார்ட்டோ அவரவர் புத்திக்கேற்ப செய்து இந்த வாரம் ஜென்மசாபல்யம் அடைவார்கள்.எஃப்அன்ட்ஓவில் குறிப்பாக ஆஃப்ஷன் டிரேடிங்கில் இந்த வாரம் அதானிபோர்ட்ஸ் பங்கு முக்கியத்துவம் பெறும்.அது எந்த கால் அல்லது எந்த புட் என்பதை இங்கே பொதுவெளியில் சொல்லக்கூடாது என்று நேற்றிரவூ சற்றேறக்குறைய கலங்கலாக என் கனவில் வந்த மோனிக்கா பெலுரசியின் மீது சத்தியம் செய்திருக்கிறேன்.அந்த விபரமெல்லாம் "புல்ஸ்ஸ்ட்ரீட்" ஆஃப்ஷன் கால்புட் ஆன்லைன் இதழின் சந்தாதாரர்களுக்கு மட்டுமே.
இந்த வாரம் புத்தாண்டிற்கு முந்திய மொமன்ட்டத்தில் சந்தையூம் நிஃப்டியூம் பாங்க்நிஃப்டியூம் மஞ்சள் வண்ண ஃபோகஸ் லைட் வெள்ளத்தில் மிதந்து வரும் நிதிஅகர்வால் போல மொறுமொறுப்பாக உங்களை கிறங்கடிக்கப்போகிறது.
அப்புறம் யார் யாரெல்லாம் இன்னும் நம்ம "புல்ஸ்ஸ்ட்ரீட்" யூடியூப் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்யவில்லை? சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்வது இலவசம்தான்.காசு கிடையாது.கீழே லிங்க் உள்ளது.ஓடிப்போய் சப்ஸ்க்ரைப் செய்து விட்டால் புண்ணியமாகப்போகும்.நன்றி.
ConversionConversion EmoticonEmoticon