தற்போதைய நிலைமையில் பிப்ரவரி மாத கோல்டு கான்ட்ராக்ட்டில் லாபநோக்கம் கருதிய செல்லிங் அதிகம் காணப்படுவதால் தங்கத்தின் விலையில் லேசான சரிவூ தென்பட்டுக் கொண்டிருக்கிறது.இதே இப்படியே தொடருமா என்று கேட்டால் கிடையாது.விரைவில் தங்கத்தின் விலை பவூன்ஸ்பெக் ஆகி உயரும்.அப்படி உயரும்போது அது இன்னும் இரண்டு வாரத்தில் மேலே வந்து நிற்கும்.
அதனால் தற்போது பிப்ரவரி கோல்டு ஃப்யூச்சர் கான்ட்ராக்ட் 39000க்கு கீழே இருக்கிற வரை எப்போதெல்லாம் அது இன்னும் கொஞ்சம் இறங்கி ஒரு ட்ரன்ட் மாறுதலைக் காண்பிக்கிறதோ அப்போதெல்லாம் வாங்கியதை விற்றுக் கொண்டே வரலாம்.அல்லது லீனியராகப் போக விரும்புபவர்கள் பிப்ரவரி மாத கான்ட்ராக்ட் நல்ல இறக்கத்தைக் காண்பிக்கும்போது வாங்கி வைத்துக் கொண்டு ஏறியதும் விற்கலாம்.எனினும் இன்ட்ராடேயில் அது ரேஞ்ச் பவூன்ட்டாக சுற்றி ஆரம்பித்து விட்டால் லீனியர் டிரேடிங் அப்போது சரிப்பட்டு வராது.கையில் உள்ளவற்றை சொற்ப லாபமாயினும் விற்று வெளியே வந்து விடுவது நல்லது.
இந்த பதிவை எழுதும் நேரத்தில் பிப்ரவரி மாத கோல்டு ஃப்யூச்சர் 0.15 சதவீதம் (அதாவது சுமார் 60 புள்ளிகள் தாழ்ந்து) இறங்கி 39020ல் நிலை கொண்டிருக்கிறது.
ConversionConversion EmoticonEmoticon