பட்ஜட் என்பது இனிப்பும் கசப்புமாக கலந்துதான் இருக்கப்போகிறதென்று எதிர்பார்க்கிறௌம்.தனிநபர் வருமானவரி உச்ச வரம்பை என்ன செய்யப்போகிறார்கள் என்றும் கார்ப்பரேட் வரியை ஏதாவது குறைப்பார்களா என்ற எதிர்பார்ப்பிலும்தான் சந்தை பட்ஜட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.கிட்டத்தட்ட இந்த பட்ஜட் என்பது "ஓன் இந்தியா" என்ற டெஸிபலில் ஓங்கி ஒலிக்கும்.அதில் சில அதிருப்திகளும் தோன்றி செய்திச் சானல்களில் பிசுபிசுத்துப் போகும் விதத்தில் இருக்கும்.
இன்சூரன்ஸ் மருத்துவம் விவசாயம் ஆன்லைன் பணப்பரிமாற்றம் தொடர்பானவைகளுக்கு சலுகைகள் எதிர்பார்க்கலாம்.ரயில்வேயை முழுதாக தனியார் மயமாக்கக்குக்கான பிள்ளையார் சுழியையூம் போட்டு விடலாம்.இன்னும் மிச்சம் மீதமிருக்கிற பொதுத்துறை நிறுவனங்களை டிஸ்இன்வஸ்ட்மென்ட் ரூட்டில் செல்ல நெட்டித் தள்ளி விடலாம்.அதனால் வருகிற பட்ஜட் சமயத்தில் நிஃப்டி என்பது அடுத்த உளவியல் புள்ளியான 12540ஐ கடக்க வேண்டும்.அப்படி கடந்து செல்லும்போது ஒரேயடியான ஆதரவூ அலை அரசுக்கு வீசினால் நிஃப்டி 12785க்கு அருகில் சென்று திரும்பலாம்.
அந்த எல்லையைத் தொட்டவூடன் விதி சின்னதாக ஒரு சிரிப்பு சிரித்து சந்தையின் அருகில் உட்கார்ந்து கொண்டு ஒரு கரக்க்ஷனை ஏற்படுத்தி வைக்கும்.அதற்குள் இப்போது தேர்ந்தெடுத்து வாங்குகிற பங்குகளை பட்ஜட் சமயத்தில் விற்று லாபத்தை புக் செய்து விட்டு கோவா பக்கமாகப் போய் கடற்கரையில் கவித எழுதலாம் என்றிருக்கிறேன்.
ConversionConversion EmoticonEmoticon