நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை ஆயூள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி தனது பத்து வருட காலத்தில் செய்திருந்த முதலீடுகளிலிருந்து மூன்று மடங்கு வளர்ச்சியை சென்ற ஆண்டு அடைந்திருப்பதாக தனது செய்திக் குறிப்பொன்றில் குறிப்பிட்டிருப்பது கொஞ்சம் ஆறுதலான விஷயமே.
எல்ஐசி பங்குச்சந்தையில் தனது பணத்தை முதலீடு செய்ய வந்தபோது அனைவருமே பயந்து போய் நெகட்டிவ் கருத்துக்களை கொட்டித் தீர்த்திருந்தார்கள்.ஆனால் இப்போது எல்ஐசி தனது அத்தனை விதமான முதலீடுகளிலிருந்தும் கடந்த பத்தாண்டுகளில் 291 சதவீத வளர்ச்சியை (கிட்டத்தட்ட இது மூன்று மடங்கு வளர்ச்சி) அடைந்திருப்பதாகக் குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது.
எல்ஐசியின் இன்னொரு கரமான எல்ஐசி வீட்டுவசதி நிறுவனத்தின் வளர்ச்சியூம் இதே போல இருக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்;. எனினும் வீட்டுக்கடன் விஷயத்தில் எச்டிஎஃப்சி இந்தியாபுல்ஸ் ஹவூசிங் ஃபைனான்ஸ் ஆகிய இரண்டும் போட்டி போட்டுக் கொண்டிருந்தாலும் இதில் எச்டிஎஃப்சியை விட்டு விடலாம்.காரணம் அதன் வங்கிப் பிரிவூ இணக்கமாக இல்லை.சுணங்கிப் போயிருக்கிறது.இதற்கு காரணம் அது தாறுமாறாக வழங்கிய வாராக்கடன்கள்தான் காரணம்.
இந்நிலையில் வீட்டுக்கடன் என்றால் அது இந்தியாபுல்ஸ்ஹவூசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தையூம் எல்ஐசி வீட்டு வசதி நிறுவனத்தையூம் மட்டுமே முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் தங்களுக்கான வாய்ப்பாகக் கருதலாம்.
இதில் எல்ஐசி முதலீட்டுக்கானதாகவூம் இந்தியாபுல்ஸ் ஸ்பெகுலேட்டிவ்வான டிரேடிங்கிற்கானதாகவூம் வளர்ந்து கொண்டிருக்கின்றன என்றே சொல்லலாம்.
ConversionConversion EmoticonEmoticon