சாதாரணமாக வங்கிக் கடன்களுக்கு சுமார் சாதா குடிமகன்கள் சென்றால் எந்த அளவிற்கு அலைக்கழிக்கப்படுவார்கள் என்றும் வங்கி அதிகாரிகள் எத்தனை விதமான டிசைன் டிசைனான டாக்குமென்ட்டுகளைக் கேட்டு ஓடிப்பிடித்து விளையாடுவார்கள் என்பதும் அனைவருக்கும் தெரியூம்.வெறும் அம்பது காசு ஆமா..அம்பது காசுதான் கடனாகக் கேட்டுச் சென்றாலும் ஐந்து லட்சத்திற்கு பிணைத்தொகையோ அல்லது அடமானச் சொத்தோ வேண்டுமென்று சிரித்தவாறே குரூரப்புன்னகையூடன் கேட்பார்கள் என்பதும் இன்று காலை மகப்பேறு மருத்துவமனையில் பிறந்திருக்கும் புதிய குழந்தைகளுக்குக் கூட புரியூம்.தெரியூம்.
ஆனால் இந்த ஆக்சிஸ் வங்கி என்று ஒரு பெத்த பெரிய வங்கி இருக்கிறது.முன்னாள் யூனிட் ட்ரஸ்ட் இந்தியாவின் வங்கி இது.இந்த வங்கி இப்போது கம்பெனிகளின் திவால் தீர்ப்பாயதத்திடம் ஒரு நிறுவனத்தை "திவால்" ஆகி விட்டதாக அறிவிக்கும்படி விண்ணப்பித்திருக்கிறது.அப்படி கடன் வாங்கி திவால் ஆகிவிடக்கூடிய நிலையில் இருக்கும் யாரந்த ஏழை என்று பார்த்தால் அது ஆர்பவர் என்ற நிறுவனம்தான்.அதாவது இந்தியாவில் பரமஏழைகளில் ஒருவரான அனில்அம்பானியில் நிறுவனம்தான் அது.அந்த ஆர்பவர்; நேரடியாக இதில் திவால் நிலைமைக்குச் சென்று விடவில்லை.ஆர்பவர் ஒரு துணை நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்தது.அந்த துணை நிறுவனத்தின் பெயர் விபர்தா இன்டஸ்ட்ரீஸ் பவர் லிமிடட்.இதுதான் அந்த ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் துணை நிறுவனம்.இந்த நிறுவனம் பல வங்கிகளிடம் கடன் பெற்றிருந்தாலும் ஆக்சிஸ் வங்கியில் மட்டும் பெற்றிருந்த கடன் சுமார் 553.28 கோடி ரூபாய் என்ற மிகச் சிறிய சொற்பத் தொகைதான்.நமக்குத்தான் இது பெரிய தொகை.பெரிய தொழிலதிபர்களுக்கும் கார்ப்பரேட்காரர்களுக்கும் இது பொரிஉருண்டை அளவிற்கான தொகையே என்பதுதான் இதிலுள்ள வருத்தமான முரண்.
இந்த அளவிற்கான தொகையை ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் விபர்தா இன்டஸ்ட்ரீட் பவர் லிமிடட் செலுத்த மறுப்பதால் இந்த நிறுவனத்தை திவால் ஆன நிறுவனமாக அறிவிக்கும்படி கம்பெனிகள் திவால் தீர்ப்பாயத்திடம் (CIRP (Corporate Insolvency Resolution Process)
ஆக்சிஸ் வங்கி விண்ணப்பித்திருக்கிறது.
சற்று முன் வந்த தகவலின்படி ரிலையன்ஸ் பவர் நிறுவனம் இந்த விவகாரத்தை தீர்ப்பாயத்திற்கு வெளியோ "பேசி தீர்த்து செட்டில்" செய்து கொள்ளலாம் என்று கேட்டிருக்கிறது.
ஆக்சிஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறீர்களா நீங்கள்?
ஆக்சிஸ் வங்கியில் பணத்தை பிக்சட்டில் போட்டு வைத்திருக்கிறீர்களா நீங்கள்?
பார்த்து கவனம்.விதி வலியது.
ConversionConversion EmoticonEmoticon