கன்ஸ்யூமர் பைனான்ஸ் நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸின் ஒரு அங்கமான பஜாஜ்பின்செர்வ் நிறுவனம் தனது காலாண்டு முடிவூகளில் 32 சதவீத உயர் வளர்ச்சியை அடைந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.இந்த அளவிற்கான உயர்வூ எதிர்பார்த்ததே.ஏனென்றால் நாட்டில் நுகர்வூ கலாச்சாரம் ஆன்லைன் வழியாக வளர்ந்து கொண்டே இருக்கும் நிலையிலும் நாட்டில் பஞ்சபராரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையிலும் சிபில்ஸ்கோர் என்ற துரண்டிலை வைத்து மக்களை பொருட்களை வாங்கிக் குவிக்கச் செய்யூம் கலாச்சாரமும் இருக்கும் வரையில் இது போன்ற நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கவே செய்யூம் என்பது உண்மைதான்.
இதே பஜாஜ்பின்செர்வ் அப்போது பஜாஜ் ஆட்டோஃபைனான்ஸ் என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருந்தது.அப்போது படுநஷ்டத்தில் இருந்தது.அப்போது அதன் பங்கின் விலை ரூ 150க்கெல்லாம் கிடைத்தது.அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தவர்களுக்கெல்லாம் பங்குகளை வலுக்கட்டாயமாகக் கொடுத்து வாங்கிக் கொள்ளச் சொல்லி கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்திருந்த காலம் அது.அப்போது அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை அந்த நிறுவனத்தை வைத்துப் பார்க்காமல் மக்களிடம் வரப்போகிற நுகர்வூ கலாச்சாரத்தின் வளர்ச்சியை எண்ணிப் பார்த்து அந்த பங்கை வாங்கி வைத்துக் கொள்ளும்படி நமது வாடிக்கையாளர்களுக்கு அப்போது பரிந்துரைத்திருந்தோம்.அது பின்னர் ரூ 600க்கு சென்றபோது லாபப்பாதைக்குத் திரும்பியது.பொறுமையில்லாத சாதா முதலீட்டாளர்கள் எல்லாம் ரூ 150க்கும் குறைவான விலையில் வாங்கிய இந்த பங்கை ரூ 600க்கு விற்று விட்டு எனக்கு நட்சத்திர ஹோட்டலில் ட்ரீட் வைக்க முன்வந்தார்கள்.அப்போதும் மறுத்தேன்.இது இன்னமும் மேலே போகும் வைத்துக் கொள்ளுங்கள் என்று.
விற்காமல் வைத்திருந்தவர்கள் கோடீஸ்வரரர்கள் ஆனார்கள்.
ஏனென்றால் இந்த பஜாஜ்பின்செர்வ் பங்கின் நேற்றைய விலை ரூ 9924 ஆக இருக்கிறது.
என்ன ஒரு வளர்ச்சி.என்ன ஒரு லாபம்.
இது போன்ற பங்குகளைத்தான் அவை சின்ன விலைகளில் இருக்கும்போது நமது "புல்ஸ்ஸ்ட்ரீட்" ஆன்லைன் இதழ்களில் பரிந்துரை செய்து வருகிறௌம்.
ConversionConversion EmoticonEmoticon