ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கு அடுத்த வருகிற டிகேட் எனப்படும் பத்தாண்டுகளில் பெரும் வளர்ச்சியடைக்கூடிய துறை எது என்று கண்டறிந்து அதில் செய்யப்படும் முதலீடு மட்டுமே பெரிய லாபத்தை முதலீட்டாளர்களுக்கு காலம் காலமாக தந்து வருகிறது.இப்படித்தான் 80களின் நடுப்பகுதியில் சாப்ட்வேர் தொழில்நுட்பம் வளரப்போகிறது என்று கண்டறிந்து அதில் செய்யப்பட்ட சில ஆயிரங்கள்தான் கோடிகளாக வளர்ந்து இப்போது பலபேரை கோடீஸ்வரரர்களாக்கியிரு;ககிறது.அது போல 2000களின் முற்பகுதியில் சின்னச் சின்ன ஃபார்மா நிறுவனப் பங்குகளில் செய்யப்பட்ட சில ஆயிரங்கள்தான் அதன்பின் பல லட்சங்களை முதலீட்டாளர்களுக்கு தந்து அவர்களின் சொந்த வீடு பிள்ளைகளின் திருமணம் உயர்கல்வி வெளிநாட்டுக் கல்வி போன்றவற்றிக்கு உதவியிருக்கிறது.
இதே போல இப்போதைய சூழ்நிலையில் எதிர்காலத்தில் என்ன செக்டார் பெரும் வளர்ச்சி பெறும் என்று ஆய்வூ செய்ததில் அது ஈகாமர்ஸ் வணிகம் என்றே கண்டறிந்திருக்கிறௌம்.
இந்த ஈகாமர்ஸ் வணிகம் என்பது 2000ன் துவக்கத்திலேயே வந்தது என்றாலும் இந்த இருபது ஆண்டுகளில் இது டேக் ஆஃப் ஆகாமல் சுணக்கம் பெற்றே வந்திருக்கிறது.இதற்கு ஒரு காரணம் மக்களின் மனோபாவம் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனங்களின் மீதான பயம் மற்றும் அவநம்பிக்கை.ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளில் இருந்து வந்த மோசடி ஏமாற்றுதல் போன்றவையூம் ஈகாமர்ஸ் துறையின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போட்டுக் கொண்டே வந்தது.
இப்போதுள்ள நிலையில் சில்லரை வணிகத்தில் ஈகாமர்ஸ் துறையின் பங்களிப்பு என்று பார்க்கப் போனால் அது சுமார் 5 சதவீதமாகத்தான் இருக்கிறது.ஆனால் இன்னும் ஐந்து முதல் பத்தாண்டுகளில் இது மிகப்பெரிய வளர்ச்சி பெறும் என்றே அறுதியிட்டு அறிவிக்கிறௌம்.
இந்த ஈகாமர்ஸ் துறையில் பெரிய அளவில் எதிர்காலத்தில் வளரும் என்று நம்பிக்கையளிப்பதாக பின்வரும் இரு நிறுவனங்கள் இருக்கின்றன.அவற்றில் தில் இருக்கிற முதலீட்டாளர்கள் முதலீடு செய்து பார்க்கலாம்.
இந்தியாமார்ட் இன்டர்மெஷ் லிமிடட்.
பத்து ரூபாய் முகமதிப்புள்ள இந்த பங்கின் தற்போதைய விலை ரூ 2164 ஆகும்.இது ஒரு பிசினஸ் டு பிசினஸ் (பி-டு-பி) நிறுவனம்.
இன்ஃபோஎட்ஜ்(இந்தியா)
பத்து ரூபாய் முகமதிப்புள்ள இந்த பங்கின் தற்போதைய விலை ரூ 2595 ஆகும்.இது நாக்ரி என்ற நிறுவனமேதான்.இது இது ஸொமாட்டோ பாலிசி பஜார் மெரிட்நேஷன் போன்ற ஸ்டார்ட்அப்களில் முதலீடும் செய்திருக்கிறது.
எதிர்காலம் ஈகாமர்ஸூக்குத்தான் என்பதால் அதனை நோக்கியே உங்களது முதலீட்டு நகர்வினை வைத்துக் கொள்வது நல்லது.
ConversionConversion EmoticonEmoticon