அமெரிக்கா-ஈரான் இடையே உரசல் வந்து கொண்டிருக்கிறது.இதன் காரணமாக ஒரு சின்ன உலகப்போர் வந்தாலும் வராவிட்டாலும் இங்கே ரிலையன்ஸ் குழுமப் பங்குகள் மேலே உயரும்.அப்படி உயராவிட்டால் அந்த பங்குகளை அவர்களே வாங்கி சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.அவை சில காலம் கழித்து மேலே ஏறுவது போல தோற்றம் தரும்போது அவர்கள் பத்திரமாக விற்று வெளியே வந்து விடுவார்கள்.ஆகா ஏறுது ரிலையன்ஸ் என்று அப்போது உள்ளே போகும் அபிமன்யூகள் பத்மவியூகத்தின் பயங்கரம் தெரியாமல் மாட்டிக் கொண்டு சாவார்கள்.
இன்னொரு பக்கம் அதானி இருக்கவே இருக்கிறார்.அதானி குழுமப் பங்குகளையூம் அவற்றின் விலை குறையூம்போதெல்லாம் வாங்கிக் கொண்டே வந்தால் அவற்றின் விலை ஏற ஏற விற்றுக் கொண்டே வரலாம்.இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்கலாம்.ஆபத்து காலங்களிலும் காற்றுள்ளபோதே துரற்றிக் கொள் என்கிற ரீதியிலான கால கட்டங்களிலும் அதானியூம் அம்பானியூம்தான் உள்ளே-வெளியே ஆடுவதில் வல்லவர்கள்.அதாவது அவர்கள் நிறுவனப் பங்குகளையே நிழலாக வாங்கி விற்றுக் கொள்வார்கள்.இதெல்லாம் உனக்கு தெரியூமா? நீ நேரில் பார்த்தியா என்று கேட்பவர்களுக்கு ஒரு வார்த்தை.எல்லாவற்றையூம் நேர்ல நேர்ல போய் பார்த்துட்டு வரனும்னா 'இவனே ஸ்ரீமன்நாராயணமா" படத்து ஹீரோ மாதிரி இருந்தாதான் முடியூம்.அதனால சொல்றதை கேட்டுங்க.இல்லைன்னா விட்ருங்க.
இன்னொரு பக்கம் பெட்ரோலியம் தொடர்பான பங்குகள்ல குறுகிய கால முதலீட்டை பணத்தைப் போட்டு வைக்கலாம்.
மறந்தும் பணத்தை பிக்சட்ல பாங்க்ல போட்டு வைச்சிராதிங்க.ஒருவேளை...ஆமா...ஒரு வேளை...சப்போஸ்...ஆமா சப்போஸ் நாட்டுக்காக எல்லைல வீரர்கள் பேராடிக்கிட்டிருக்காங்க.கேஸ் மாநியத்தை விட்டுதர்ற மாதிரி உங்க டெபாசிட் பணத்தை நாட்டுக்காக விட்டுக் கொடுக்கனும்னு நடுராத்திரியில ஒரு சட்டம் போட்டு ரேடியோவில அறிவிச்சிட்டா அப்புறம் அவஸ்தைப் பட வேண்டியிருக்கும்.
பங்குச்சந்தையில் இது ஒரு பரவச கால கட்டம்.வர்றவங்க வரலாம்.ரிஸ்க் எடுக்கறதுக்கு பயம் கியம் இருந்துச்சின்னா உங்களுக்காகத்தான் பொங்கலுக்கு டிவியில புதுப்படம் போடறாங்க.படம் பார்த்துட்டு சுபிட்சமா இருங்க.வாழ்த்துக்கள்!
ConversionConversion EmoticonEmoticon