google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html பஜாஜ் ஆட்டோ பங்கை "இது" உயரச் செய்யூமா அல்லது வீழ்ச்சியடையச் செய்யூமா? ~ bulls$treet

Ads Inside Post


பஜாஜ் ஆட்டோ பங்கை "இது" உயரச் செய்யூமா அல்லது வீழ்ச்சியடையச் செய்யூமா?



  ஒரு காலத்தில் மிக மிக முன்னொரு காலத்தில் பஜாஜ் நிறுவனம் தன்னுடைய ஸ்கூட்டர் தயாரிப்புகளுக்கு மிகவூம் பெயர் பெற்று விளங்கியது.ஹமாரா பஜாஜ் என்ற பஜாஜ்-ன் விளம்பரம் அந்தக்கால விவித்பாரதி வர்த்தக ஒலிபரப்பினிடையே துள்ளலாக ஓடி வந்து கொண்டிருக்கும்.அதே பஜாஜ் நிறுவனம் இந்த மாதம் 14ம் தேதி தன்னுடைய  புகழ்பெற்ற பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரை எலக்ட்ரிக் ஸ்கூட்டராக விற்பனைக்கு விடுக்கிறது.



 பஜாஜ்-ன் இந்த முயற்சி புத்திசாலித்தனமான முயற்சியா அல்லது தற்கொலைக்கு சமமான முயற்சியா என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்து விடும்.ஏனென்றால் ஸ்கூட்டர்களின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய பஜாஜ் தன்னுடைய கம்பேக்-ஐ பெட்ரோலில் இயங்கக் கூடிய ஸ்கூட்டராகவே செய்திருக்கலாம்.மின்சார ஸ்கூட்டர் என்பது ஒரு வித அசட்டுத்தனத்துடன் கூடிய துணிச்சல் என்றுதான் சொல்ல வேண்டும்.காரணம் இது மேம்போக்காகப் பார்த்தால் பணக்காரர்களைக் கவரும் உத்தியாக இருந்தாலும் பெட்ரோலில் ஓடும் ஸ்கூட்டருக்கு இன்னமும் நிறைய தேவை இருக்கிறது.
 டிவிஎஸ் விற்பனையில் செய்த அட்ராசிட்டிகளைப் பொறுக்கமாட்டாமல் மக்கள் வேறு யாராவது ஒரு பிரான்ட்டை கொண்டு வர மாட்டார்களா என்று காத்திருந்தபோதுதான் அதிவேக பைக்குகளின் அசுரனான யமஹா உள்ளே வந்து ஸ்கூட்டர் மார்க்கெட்டில் டிவிஎஸ்ஐ மண்ணைக் கவ்வ வைத்தது.
 ஆனால் இன்னமும் ஸ்கூட்டருக்கு தேவை இருக்கிறது.அதனைப் பூர்த்தி செய்ய ஹோன்டாவின் ஆக்டிவா மற்றும் டியோ இன்னொரு பக்கம் யமஹா என்று இருந்தாலும் பஜாஜ்-ன் பெட்ரோலில் ஓடும் ஸ்கூட்டருக்கே அதிக தேவை இருக்கிறது.
 பேட்டரியில் ஓடும் பஜாஜ் சேட்டக் வெற்றி பெறுவது என்பது கத்தி மேல் நடப்பதைப் போன்றதே.
 இதனால் பஜாஜ் ஆட்டோ பங்கின் நிலை என்னவாகும் என்று ஒரு டிரேடராக யோசித்தால் கடந்த மூன்று மாதங்களில் பஜாஜ் ஆட்டோ 2865 என்ற விலையிலிருந்து 3289 என்ற விலைக்கு உயர்ந்து தற்போது 3050க்கு அருகில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.
 ஒருவேளை பஜாஜ்-ன் இந்த முயற்சி வெற்றி பெற்றால் பஜாஜ் ஆட்டோ பங்கின் விலை ரூ 3289யூம் தாண்டி ரூ 3405 வரை சென்று விடும்.அப்படியில்லாமல் வாடிக்கையாளர்களின் மத்தியில் அதிருப்தியூம் ஏமாற்றமும் ஏற்பட்டால் பஜாஜ் ஆட்டோ பங்கின் விலை ரூ 2665க்கு கீழே சென்று விடும்.



 இப்படி எழுதுவதற்கு காரணம் இருக்கிறது.
 இருபது வருடங்களுக்கு முன்னர் பஜாஜ் இது போன்ற ஒரு முயற்சியை கையில் எடுத்தது.அப்போது நின்று போயிருந்த தனது பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டருக்கு பதிலான நான்கு ஸ்ட்ரோக் ரக ஸ்கூட்டராக சஃபயர் என்றொரு மாடலைக் கொண்டு வந்தது.அப்போது அதனை முதல் ஆளாகப் போய் ரூ 35000க்கு வாங்கி அதன்பிறகு நான்கே ஆண்டுகளில் ஸ்கூட்டர் தயாரிப்பையூம் அதற்கான ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பையூம் பஜாஜ் நிறுத்தி விட அந்த ஸ்கூட்டரை நான்கே ஆண்டுகளில் வெறும் 1500 ரூபாய்க்கு உடைப்பதற்காக காயலான் கடைக்கு கொடுத்து விட்டேன்.
 இப்போது அதே போன்ற இன்னொரு முயற்சியை பஜாஜ் கையில் எடுக்கிறது.
 இந்த முறை நான் பஜாஜ் ஸ்கூட்டரை வாங்குவதாக இல்லை.ஸ்கூட்டரில் விட்ட காசை பஜாஜ் ஆட்டோ பங்கில் சம்பாதித்து விடும் வாய்ப்பை கண்டறிந்து விட்டேன்.


Previous
Next Post »