முதல் காரியமாக எஃப்ஐஐ எனப்படும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை வெளியே எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.சரமாறியாக பங்குகளை அவர்கள் விற்று வெளியேற முடிவெடுத்ததற்கு காரணம் ஈரான்-அமெரிக்காவினால் மத்தியக் கிழக்கில் ஏற்பட்டிருக்கும் பதட்டமே காரணம்.இந்த புவி-அரசியல் நிலைமை அவர்களை இன்னும் சிறிது காலத்திற்கு மார்க்கெட் பக்கம் வரவிடாமல் தடுக்கும்.அதன் காரணமாக உள்ளுர் முதலீட்டு நிறுவனங்களும் முதலீடுகளை விற்று பணமாக்கிக் கொள்ள முயற்சி செய்யூம்.இந்த நிலை தொடரும் போது ஒரு ரிலே ஓட்டம் போல உள்நாட்டிலுள்ள பெரிய முதலீட்டாளர்களும் ஸ்பெகுலேட்டிவ் டிரேடர்களும் பங்குகளை விற்பார்கள் மற்றும் ஷார்ட்செல்லிங்கில் குதிப்பார்கள்.
இதன் காரணமாக மார்க்கெட் இன்னும் சரியத்தான் வாய்ப்பிருக்கிறது.
அப்படி மார்க்கெட் சரிந்து துவண்டு விழும்போது நல்ல பங்குகள் சல்லிசான விலைக்கு கிடைக்கும்.நீங்கள் வாங்க நினைத்த பங்குகளை மலிவான விலைக்கு வாங்கவூம் முடியூம்.
ஏனென்றால் இது கரடிகள் ராஜ்ஜியம் (short sell traders) என்பது நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது.
ConversionConversion EmoticonEmoticon