மத்தியக்கிழக்கில் உருவாகி வருகின்ற மெலிதான போர் அபாயம் இங்கேயூம் மெல்ல எட்டிப்பார்க்க ஆரம்பித்திருக்கிறது.முதற்கட்டணமாக எண்ணைய் விலை தடுமாற்றமடைவதும் தட்டுப்பாடும் ஏற்பட்டு அதன் விலை உயரும்.இது கமாடிட்டி டிரேடர்களுக்கு ஒரு தற்காலிக வரப்பிரசாதம்.உலக அளவில் வர்த்தக உலகில் ஒரு சுணக்கத்தை ஏற்படுத்தி டிமான்டையூம் செயற்கையாக ஏற்படுத்தி உலக வர்த்தகத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் முயற்சியாகவே இந்த வணிக நுண்ணரசியலைப் பார்க்க வேண்டும்.இதன் பக்க விளைவாக இங்குள்ள ப்ளுசிப் பங்குகள் சரசரவென்று விலை குறையூம்இஆனால் மீண்டு ஏறி விடும்.ஸ்மால்கேப் பங்குகளும் மிட்கேப் பங்குகளும் சரசரவென்றுதான் விலை குறையூம்.ஆனால் திரும்ப மேலே ஏறாது.மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் தொடர்பான மியூச்சுவல் ஃபன்ட்டுகளில் பணம் போட்டிருப்பவர்கள் ஏமாற்றத்தை எதிர்கொள்ள தயாராகி விடுங்கள்.
இந்த நிலைமையில் ஒரே ஆறுதலாக இருப்பது ஹைரிஸ்க் எடுப்பவர்களுக்கான ஆஃப்ஷன் டிரேடிங்கும் எதிர்காலத்திற்கான முதலீடுகளை சின்ன விலைகளில் கிடைக்கிற பென்னிப் பங்குகளில் போட்டு வைப்பதும்தான்.
அப்படிச் செய்பவர்களுக்கே இப்போதுள்ள களேபரம் ரணகளம் எல்லாம் முடிந்து பார்க்கிறபோது அவர்களது முதலீடுகள் பெரிதாக வளர்ந்து நின்று அவர்களை ரட்சிக்கும்.
அப்படி செய்யாத மற்றவர்களுக்கு இது போதாத காலம்.
ConversionConversion EmoticonEmoticon