இந்த வார மார்க்கெட்டின் கடைசி நாளான இன்று கடுமையான நெகட்டிவ் அலை வீசத் துவங்கி மதியத்திற்கு மேல் சிறிது ரெகவரி கிடைத்திருக்கிறது.மார்க்கெட்டின் பரிமாணம் இனி வரும் நாட்களில் பட்ஜட் தொடர்பான எதிர்பார்ப்பில் ஒரு வித தவிப்போடு இருக்கும்.இந்த வாரம் நிஃப்டி என்ன கணக்கு சொல்கிறது என்றால் அதன் ஆஃப்ஷனைப் பற்றி சொல்ல வேண்டுமானால் அது 12300 கால் ஆஃப்ஷனிலும் 12200 புட் ஆஃப்ஷனிலுமே பிரமானமாக நிலை கொண்டிருக்கிறது.நாம் அடிக்கடி குறிப்பிடும் நிஃப்டி ஸ்பாட்டின் உளவியல் புள்ளியான 12222ஐ தாண்டிச் சென்றிருந்தாலும் அதனை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனது வரும் வாரத்தில் அழுத்தமான புல்பேக்கோ அல்லது அழுத்தமான செல்லிங்கோ வந்து ஆட்டத்தைக் கலைக்காத வரை நிஃப்டி என்பது 12200க்கும் 12300க்கும் நடுவே ஒரு ரேஞ்ச் பவூன்ட் போலத்தான் கண்ணாமூச்சி காட்டப் போகிறது.
இந்த கோட்டைத் தாண்டி யாரும் உள்ள வரக்கூடாது என்பதே நிஃப்டி மறைமுகமாக தற்போது நமக்குத் தரும் செய்தி.
ConversionConversion EmoticonEmoticon