தேதியப் பங்குச்சந்தையான என்எஸ்இ (NSE) இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐபிஓவிற்கு வரப்போவதாக செய்திகளைத் தந்திருக்கிறது.என்எஸ்இயின் நிஃப்டியை ஒரு விற்பனைக்கு விடும் விளைபொருள் போல வாங்கி விற்றுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நிஃப்டியைக் கொண்டுள்ள தேசியப் பங்குச்சந்தையையே ஒரு விளைபொருள் போல இனி அதே என்எஸ்இயிலேயே பங்கு போல வாங்கி விற்கலாம்.அத்தகைய ஒரு வழியை ஐபிஓ வழியாக என்எஸ்இ தர இருக்கிறது.இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் இருக்கிற என்எஸ்இ இது விஷயமாக செபியை அணுகியிருக்கிறது.செபியின் அனுமதி கிடைத்ததும் இதற்கான லீட் மேனேஜர்களை நியமித்து வேலைகளை முடுக்கி விடப் போகிறது.
இதற்கிடையே என்எஸ்இ இன்னொரு வேலையிலும் இறங்கியிருக்கிறது.என்எஸ்இ போலவே இன்னொரு பங்குச்சந்தை இருக்கிறது.அதன் பெயர் என்சிடிஇஎக்ஸ் (NCDEX) இதன் பெயர் தேசிய கமாடிட்டி மற்றும் டெரிவெட்டிவ் எக்சேஞ்ச் என்பதாகும்.வேளாண்பொருட்களின் மீது கவனம் செலுத்தும் இந்த எக்சேஞ்ச் கொஞ்சம் பணமுடையில் இருப்பது உண்மைதான்.இதனால் தன்னை மற்ற எக்சேஞ்சுடன் மெர்ஜரில் இணைத்துக் கொள்ள விரும்புகிறது.இதற்காக ஆயிரம் கோடி ரூபாயை என்சிடிஇஎக்ஸ் எதிர்பார்க்கிறது.ஆனால் இந்த மெர்ஜருக்கு அறுநுரறு கோடிக்கு மேல் தர இயலாது என்று இத்துடன் மெர்ஜரில் இணைய விரும்பும் என்எஸ்இ தெரிவிக்கிறது.
எது எப்படியோ என்எஸ்இ ஒரு துடிப்பை இந்த ஆண்டின் துவக்கத்திலேயே காட்ட ஆரம்பித்திருக்கிறது
ConversionConversion EmoticonEmoticon