கடந்த சில மாதங்களாகவே டாடா குழுமத்தில் உயர்மட்ட நிலையில் குழப்பங்கள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் கம்பெனி தீர்ப்பாயம் ஒரு ஆர்டரைப் போட்டது.டாடா குழுமத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்ட்ரியை நீக்கியது செல்லாது என்றும் அந்த குழுமத்தின் தலைவராக திரு.சந்திரசேகரனை நியமித்தது அநீதியானது.ஆட்சேபகரமானது.எனவே உடனே மறுபடி சைரஸ் மிஸ்ட்ரியை தலைவராக டாடா குழுமம் நியமிக்க வேண்டுமென்று தீர்ப்பளித்து விட்டது.
இந்த தீர்ப்பு வந்தவூடனே திரு.சந்திரசேகரன் உடனே டாடா கம்பெனியில் பணிபுரிபவர்களுக்கெல்லாம் ஒரு கடிதம் எழுதினார்.அதில் கம்பெனி தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புதான் அநீதியானது.சட்டத்திற்குப் புறம்பானது என்று குமுறியிருந்தார்.
இப்போது இந்த விஷயம் குறித்து சைரஸ் மிஸ்ட்ரி தரப்பிலிருந்து பதில் வந்திருக்கிறது.சைரஸ் மிஸ்ட்ரி தான் மறுபடி டாடாவின் எந்த ஒரு கம்பெனிக்கும் தலைவராக முயற்சிக்கப் போவதில்லை என்றும் அதை விட டாடா குழுமத்தின் முதலீட்டாளர்களில் சிறுபான்மை முதலீட்டாளர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் அதற்காகத்தான் தான் பாடுபடப் போவதாகவூம் தெரிவித்திருக்கிறார்.
சிறுபான்மை முதலீட்டாளர்கள் என்றால் அதிக அளவில் பங்குகளை வைத்திருக்காதவர்கள் என்ற அர்த்தத்தில் பொருள் கொள்ள வேண்டும்.டாடாவில் இந்த சைரஸ் மிஸ்ட்ரி யார் என்ற கேள்விக்கு சற்றே பின்னோக்கிச் சென்றால் விடை கிடைக்கும்.
டாடா குழுமத்தின் ஆரம்ப காலத்தில் டாடா ஷபூன்ஜி பலோன்ஜி குழுமத்துடன் இணைந்துதான் வர்த்தகத்தை நடத்தி வந்தது.இந்த வர்த்தக் குழுமம் 1865ம் ஆண்டில் துவங்கப்பட்டது.இந்த நிறுவனத்தின் தலைவரான பலோன்ஜி மிஸ்ட்ரியின் வழி வந்தவர்தான் இந்த சைரஸ் மிஸ்ட்ரி.
இப்போது காய்களை உருட்ட ஆரம்பித்து விட்டார்கள் டாடா குழுமத்தில்.
கடந்த அக்டோபர் மாதம் டாடாமோட்டார்ஸ் பங்கு ரூ 115க்கு சரிந்துபோது இந்த பங்கை வாங்கி வைக்கச் சொல்லியிருந்தோம்.அப்போது சைரஸ் பக்கமாக தீர்ப்பு வரவில்லை.தீர்ப்பு வந்தபின்னர் டாடாமோட்டார்ஸ் ரூ 195 வரை உயர்ந்தது.
இப்போது இந்த விஷயம் உருட்டப்பட்டுக் கொண்டிருப்பதால் டாடாமோட்டார்ஸ் பங்கு மீண்டும் சரிந்து அதன்பின் மேலேறும் என்று கணித்திருக்கிறௌம்.
ConversionConversion EmoticonEmoticon