google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html பீட்சா... ~ bulls$treet

Ads Inside Post


பீட்சா...






   பொதுவாகவே நாம் அடிக்கடி நமது தளங்களில் சொல்லி வருவது என்னவென்றால் உணவூ தொடர்பான பங்குகளும் மருந்து சார்பான பங்குகளும் தொடர்ந்து நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகின்றன என்பதுதான்.வீட்டில் சமைப்பதும் வீட்டில் உண்பதும் குறைந்து வருவதை கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள்.இதைத்தான் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ்புஷ் இந்தியர்களைப் பற்றி குறிப்பிடும்போது இந்தியர்கள் அதிகம் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.அதனால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று பல ஆண்டுகள் முன்னர் அச்சம் தெரிவித்தார்.நம்ம ஊரில் எங்கு பார்த்தாலும் ஒபிசிட்டியிலும் உணவூப் பழக்கம் காரணமாக பெண்களாக இருந்தால் பிசிஓடி என்ற நீர்க்கட்டியிலும் ஆண்களாக இருந்தால் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் துரண்டப்பட்டு அவை மேலோங்குவதும்(டெய்ரி ப்ராடக்ட்டுகளையூம் பேக்கரி ப்ராடக்டுகளையூம் சாப்பிடுவதால் வரும் வினை இது) அதன் காரணமாக சின்ன சின்னப் பசங்கள் கூட உடலில் மார்பு பெண்கள் போல தொங்கிக் கிடப்பதும் வயிற்றில் சதைகள் உப்பிக்கிடப்பதுமாக மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டு நடப்பதற்கே சிரமப்படுவதால்தான் ஊரெங்கும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் சக்கை போடு போடுகின்றன.
 அதனால்தான் ஒரு முதலீட்டாளராகவூம் டிரேடராகவூம் நீங்கள் உணவூ தொடர்பான பங்குகளிலும் ஃபார்மா பங்குகளிலும் கவனம் செலுத்துவது நல்லது.



 உணவூ தொடர்பான பங்குகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் டொமினோஸ் பீட்சா நிறுவனமான ஜூபிலியன்ட் ஃபுட்வொர்க்ஸ் நிறுவனம் இன்று இரட்டை வளர்ச்சி விகிதத்தை தனது காலாண்டு முடிவூகளில் அறிவிக்கும் என்று தெரிகிறது.
 ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி என்பது அது அதிக அளவிலான புதிய விற்பனை மையங்களை வைத்து வளர்வது என்று சொல்வார்கள்.இன்னொரு விதத்தில் பார்த்தால் இருக்கிற அதே விற்பனை மையங்களை வைத்துக் கொண்டு அதிலேயே சேல்ஸை உயர்த்திப் பிடிப்பது ஒன்றாகும்.இதனை 3எஸ்ஜி(Same store sales growth) என்பார்கள்.இதில்தான் இந்த நிறுவனம் சுமார் 6 சதவீத விற்பனை உயர்வைக் கண்டிருக்கிறது.இது மட்டுமல்லாமல் நேபாளம் பங்களாதேஷ் இலங்கை போன்ற நாடுகளிலும் பீட்சா விற்பனையில் இது அதிகம் சாதனை புரிந்திருப்பதால் இந்த பங்கின் விலை இனி தாறுமாறாக உயரும். 
 இந்த பங்கின் விலை இன்று சுமார் ரூ 1776 ஆக நகர்ந்து கொண்டிருக்கிறது.இதில் ஆச்சர்!யம் என்னவென்றால் இந்த பங்கின் விலை ரூ 50 ஆக இருந்த காலத்தில் நமது அப்போதைய வாடிக்கையார்களுக்கு இதனை சின்ன விலைப் பங்காகப் பரிந்துரைத்திருந்தோம்.இது கிளை விட்டு பரவி நமது சந்தாதாரர்களுக்கு பெருத்த லாபத்தை தந்திருப்பது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது.


Previous
Next Post »