இன்று தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டிருக்கிறது.இதற்கு காரணம் ஈரான் துருப்புகள் அமெரிக்கப்படைகளை திரும்பி அடித்திருப்பதுதான்.இந்த எதிர்வினையை அமெரிக்கா எதிர்பார்த்திருக்காது.எப்போதுமே தான் மட்டுமே உலகதாதா என்ற நினைப்பிலும் கெத்திலும் இருக்கும் அமெரிக்காவிற்கு ஏற்கனவே வடகொரியா ஒரு பயத்தைக் கொடுத்திருந்தது.
இப்போது ஈரான்!
இந்த எதிர்வினைத்தாக்குதலின் காரணமாக தங்கத்தின் விலை இன்று கமாடிட்டி மார்க்கெட்டில் அதன் பிப்ரவரி மாத கான்ட்ராக்ட்டில் 1.38 சதவீதம் உயர்ந்து ரூ 41225 ஆக வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.பத்து கிராம் தங்கத்தின் விலையான இது இன்று டிரேடிங்கில் உச்ச விலையான ரூ 42278 வரை சென்றிருந்தது.
தங்கத்தின் விலையில் அழுத்தமான மாறுதல்கள் தென்பட ஆரம்பித்திருக்கும் நேரமான இது கமாட்டி டிரேடர்களுக்கு கோல்டு மெகாலாட்களில் டிரேடிங் செய்வதற்கு அருமையான தருணம் என்றே தெரிகிறது.விரைவில் இந்த தங்கத்தின் விலை ஒரு ஸ்விங் மோடிற்கு சென்றாலும் சென்று விடும்.அது இந்த ஈரான்-அமெரிக்க விவகாரத்தில் அமெரிக்காவின் அடுத்த மூவ் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்தது.
ConversionConversion EmoticonEmoticon