அக்டோபர் மாதத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீதான விசில்ஃப்ளோயர் புகார் அந்த நிறுவனம் நிதி விஷயத்தில் முறைகேடான நடத்தையை மேற்கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு பெரிதாக எழுந்தது.இது அமெரிக்கா வரையில் வெடித்து அங்கே கலிஃபோர்னியாவில் இன்ஃபோசிஸ் நிறுவனமே கோர்ட்டுக்கு வெளியே பெருத்த தொகையை அபராதமாக செலுத்தி விடுவதாக பம்மிய செய்தி வந்தபோது அதனைப் பற்றி முகப்புத்தகத்தில் கூட எழுதியிருந்தேன்.
அதைப் படித்த சில ஆசாமிகள் அதெப்படி வெள்ளையா இருக்கறவன் முறைகேடு செய்யமாட்டானே என்று கொதித்துப்போய் பதிவூக்கு பதில் தந்து கொண்டிருந்தனர்.அதன்பின்னர் இன்ஃபோசிஸ் தனது காலாண்டு அறிக்கையை சமர்ப்பித்தபோது அதன் ஆடிட் குழுவினர் தங்களது நிறுவனம் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

ஆனால் இப்போது பங்குச்சந்தையை கண்காணிக்கும் செபி நிறுவனம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீதான இந்த முறைகேடான நிதிநடத்தை குறித்து ஃபாரன்ஸிக் ஆடிட் தேவை என்றும் அதை நாங்கள் கேட்போம் என்றும் தெரிவித்திருப்பதுத மேற்படி நிறுவனத்திற்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தப் போகிறது.
அதனால் இன்ஃபோசிஸ் பங்கை யாரும் முதலீடு செய்து வைத்திருந்தால் எதற்கும் ஒரு முறை உங்களது சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி ராகுகேது பெயர்ச்சி அப்படியே கமல்பெயர்ச்சி ரஜினிபெயர்ச்சி பலனையூம் ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon