நேற்றைய தினம் தங்கத்தின் விலை உற்சாகமாக உயர்ந்திருக்கிறது.தங்கத்தின் விலையில் 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ 37411 ஆகவூம் 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ 40842 ஆகவூம் உயர்ந்து விட்டது.இது ஜிஎஸ்டி நீங்கலாக உள்ள விலை.இதில் ஜிஎஸ்டியையூம் சேர்த்துப் பார்த்தால் கொஞ்சம் போல மயக்கம் வரும்.அப்படியே சோடா கீடா சாப்பிட்டு மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள்.தங்கத்தின் இந்த விலை உயர்விற்கு காரணம் என்று சொல்ல வேண்டுமானால் அமெரிக்காகவூம்-ஈரானும் "ஏற்படுத்தி"யிருக்கிற ஜியோ பொலிட்டிக்கல் டென்ஷன்தான்.
இந்த டென்ஷன் எல்லாம் இருந்தாலும் டென்ஷனே இல்லாமல் நேற்று சரிந்த சந்தையில் டிரேடிங் வாய்ப்பை அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு அருமையாகத் தந்து விலை உயர்ந்து பாசிட்டிவ்வாக நின்று ஆடிய ஒரே பங்கு டாடாவின் டைட்டன்தான்.சந்தையின் கடும் வீழ்ச்சியிலும் டைட்டன் 1.52 சதவீத உயர்வை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.ஆனாலும் இது ஒரு இல்லிக்விட் பங்குதான்.ஆஃப்ஷனில் இதனை எடுத்தால் பெரும்பாலான வேளைகளில் பையர்கள் வரமாட்டார்கள்.வாங்கிய பொசிஷனை வைத்துக் கொண்டு திண்டாடும்படிதான் இருக்கும்.ஈக்விட்டியில் இந்த பங்கை எடுத்து வைத்துப் பார்க்க விரும்புவோருக்கு எப்போதுமே இது ஆதாயம் தரும் பங்காகவே இருந்து வருகிறது.
நேற்றைய சந்தையின் கடும் வீழ்ச்சி முதலீட்டாளர்கள் மற்றும் டிரேடர்களின் மத்தியில் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டிருக்கிறது.நமதுதளத்தில் ஆஃபர்கள் எல்லாம் முடிந்து விட்டாலும் ஆஃபர்கள் இல்லாது போனாலும் பரவாயில்லை.இந்த சந்தர்ப்பத்தை விட்டு விட முடியாது.தபால்வழிப் பயிற்சியில் சேர்ந்து கொண்டு நுட்பத்தை கற்றுக் கொள்கிறௌம் என்று நேற்று சிலர் அவசர அவசரமாக பயிற்சிகளில் சேர ஆரம்பித்தார்கள்.ஸ்டாக் ஆஃப்ஷன் பயிற்சியிலும் நிஃப்டி ஆஃப்ஷன் பயிற்சியிலும் பென்னி லெவல் ஆஃப்ஷன் பயிற்சியிலும் சேர்ந்திருக்கிறார்கள் இந்த அன்பர்கள்.
இவர்களுக்கு இந்த ஜனவரி மாத சீரீஸிலேயே ஜாக்பாட் கிடைக்குமென்று நினைக்கிறௌம்.
ConversionConversion EmoticonEmoticon