இன்றைய தினம் மார்க்கெட் விழுந்து கிடப்பது நல்லதே.நாம் அடிக்கடி குறிப்பிடும் நிஃப்டி ஸ்பாட்டின் உளவியல் புள்ளியான 12222ஐ தாண்டிச் செல்ல முடியாமல் மார்க்கெட் ஸ்தம்பித்துக் கொண்டிருக்கிறது.நமது தளத்தில் எழுதியபடி பஜாஜ் குழுமப் பங்குகள் விறுவிறுவென்றிருக்கின்றன.இன்று டாடாமோட்டார்ஸின் காலாண்டு முடிவூகள் வெளிவர இருக்கின்றன.கொஞ்சம் சுமார் சாதா முடிவூகளுக்கு மேலாகத்தான் இது இருக்கும்.
இப்போது உலக அளவிலும் சரி உள்ளுர் அளவிலும் சரி சீனாவின் கரோனா வைரஸ் தாக்குதலால் பொருளாதாரம் கொஞ்சம் கடி படும் என்று தெரிகிறது.இதன் காரணமாக முதலீட்டு நிறுவனங்கள் கொஞ்சம் பின்வாங்குவார்கள்.அதனால் நம்ம மார்க்கெட்டிலும் ஒரு மென்மையான கரக்க்ஷன் கட்டாயம் வந்தே தீரும்.அப்படி கரக்க்ஷன் வந்ததும் மார்க்கெட் ஒரு எழுச்சியை சந்திக்கும்.இப்போது பயந்து போய் மார்க்கெட்டை விட்டு விலகிச் செல்பவர்கள் அப்போது ஏக்கத்துடன் மற்றவர்கள் ஜெயித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க ஆரம்பிப்பார்கள்.
ConversionConversion EmoticonEmoticon