அண்மையில் அமெரிக்கவின் வான்வழித் தாக்குதல் பாக்தாத் நகரில் நடந்ததும் அது அங்குள்ள ஈரானின் மேஜர் ஜெனரலை சாகடித்ததும் ஒரு புதிய அமெரிக்க-ஈரான் யூத்தத்திற்கான அறிகுறி என்றே பலரும் நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.இது மேலோட்டமாக ஒரு எச்சரிக்கை என்ற அளவிலேயே இருந்து விட்டால் அது ஆசியப் பொருளாதாரத்தை பதம் பார்க்காமல் இருக்கும்.ஈரானின் பதிலடி பலமாக இருந்து விட்டாலோ அமெரிக்காவின் வழக்கமான போர்க்குணம் மூர்க்கமாக கிராஃப்ட் செய்யப்பட்டு அது அமெரிக்காவின் உள்நாட்டு பலவீனங்களை மறைக்கப் பயன்படுமானால் அது உலக அளவில் கச்சா எண்ணையின் மீது கை வைத்ததாக ஆகி விடும்.
அப்படி கச்சா எண்ணையின் மீது இந்த தாக்குதல் நிலவரத்தின் அழுத்தம் விழுமானால் அது இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்காவது கச்சா எண்ணையின் விலையில் கடுமையான ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தி விடும்.
அப்படி கடுமையான ஏற்ற இறக்கம் கச்சா எண்ணையில் ஏற்படுமானால் அது கமாடிட்டி மார்க்கெட்டில் குரூடாயிலில் டிரேடிங் செய்ய விரும்வோருக்கு ஒரு புதிய ஸ்விங் டிரேடிற்கான சந்தர்ப்பத்தை அடிக்கடி தந்து கொண்டே இருக்கும்.அப்படி ஸ்விங் மோடிற்கு குரூடாயில் செல்வது நல்லது.அது டிரேடர்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பமாக அமையூம்.
தற்போது குரூடாயில் ஜனவரி 17 கான்ட்ராக்ட்டின் தற்போதைய விலை 4499 ஆக இருக்கிறது.இந்த விலையிலிருந்து அழுத்தமாக ஸ்விங் டிரேடிங்கிற்கு குரூடாயில் செல்லும்.
விட்டு விடாதீர்கள்!
ConversionConversion EmoticonEmoticon